உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கம்யூ., ஆர்ப்பாட்டம்

கம்யூ., ஆர்ப்பாட்டம்

கம்யூ., ஆர்ப்பாட்டம்சங்ககிரி:அரசிராமணி டவுன் பஞ்சாயத்து குறுக்குப்பாறையூரில் கொட்டப்படும் குப்பையை வேறு இடத்தில் கொட்டக்கோரி, அப்பகுதி விவசாயிகள், இரு மாதங்களாக போராடி வருகின்றனர். இதற்கு ஆதரவாக, சேலம் மாவட்டம் முழுதும் கம்யூ., கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்ககிரியில் கம்யூ., விவசாய சங்க மாவட்ட செயலர் ராமமூர்த்தி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தாலுகா செயலர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல் ஆத்துாரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வட்ட தலைவர் கலைமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் இடைப்பாடி, அரசிராமணி உள்பட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை