உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பூங்கரக ஊர்வலம்

பூங்கரக ஊர்வலம்

இளம்பிள்ளை அருகே கஞ்சமலை சித்தர்கோவிலில் உள்ள சத்யா நகர் மாரியம்மன் கோவிலில், ஒரு வாரமாக தினமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நேற்று மாலை, 6:00 மணிக்கு, ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக சென்று, சித்தர்கோவில் அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் பூஜை செய்தனர்.பின் இரு பக்தர்கள், உடம்பில் அலகு குத்தினர். அப்போது, 9 பேர் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கரகத்தை தலையில் சுமந்தபடி, மேள தாளத்துக்கு ஏற்ப ஆட்டம் போட்டபடி செல்ல, பக்தர்கள் பின் தொடர்ந்து, கோவில் வளாகம் வரை ஊர்வலமாக சென்றனர். பின் மாரியம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி