உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு, 'இந்திய விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்; நிலத்தடி நீருக்கு வரி விதிப்பதை கைவிட வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய சங்கம் சார்பில், திருச்செங்கோடு பழைய பஸ் ஸ்டாண்ட் அண்ணாதுரை சிலை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணைத்தலைவர் பூபதி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஆதிநாராயணன், கரும்பு விவசாய சங்க மாவட்ட தலைவர் நல்லாக்கவுண்டர், வாலிபர் சங்க முன்னாள் தலைவர் சீனிவாசன், ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட தலைவர் ஜெயராம், மாவட்ட செயலாளர் தனசேகர் உள்ளிட்ட விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ