தீர்த்தக்குட ஊர்வலம்
ஓமலுார், ஆக. 27ஓமலுார் கோட்டை மாரியம்மன் கோவில் ஊராட்சி, மேச்சேரி பிரிவு சாலை அருகே புதிதாக வெற்றி விநாயகர் கோவில் கட்டப்பட்டு, அதன் கும்பாபி ேஷகம் இன்று காலை, 6:50 மணிக்கு நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று செவ்வாய் சந்தையில் உள்ள காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து, ஏராளமான பக்தர்கள், தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்து, ஊர்வலமாக விநாயகர் கோவிலை அடைந்தனர்.