உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.120க்கு பதில் 150 வசூல்பழநி பக்தர்கள் அதிர்ச்சி

ரூ.120க்கு பதில் 150 வசூல்பழநி பக்தர்கள் அதிர்ச்சி

ரூ.120க்கு பதில் 150 வசூல்பழநி பக்தர்கள் அதிர்ச்சிஇடைப்பாடி:சேலம் மாவட்டம் இடைப்பாடியில் இருந்து, 30,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், பல்வேறு குழுக்களாக பழநிக்கு பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களது குடும்பத்தினர், முதியோர், பஸ்களில் செல்வர். குறிப்பாக வரும், 17, 19ல், பழநி மலையில் இடைப்பாடி காவடிகள் பூஜை செய்ய உள்ளனர். அத்துடன், 19 இரவு, பழநி மலையில் தங்க உள்ளனர். இதனால் அடுத்து வரும், 4 நாட்களும், இடைப்பாடியில் இருந்து பஸ்கள், வேன்கள் மூலம், 10,000க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் தமிழக அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஏற்கனவே இடைப்பாடியில் இருந்து பழநிக்கு இயக்கப்படும் பஸ்சில், 120 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சிறப்பு பஸ்களில், 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து இடைப்பாடி அரசு போக்குவரத்து கிளை மேலாளர் தமிழரசனிடம் கேட்டபோது, ''சிறப்பு பஸ்கள் என்றால், கூடுதல் கட்டணம் தான் வசூலிக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை