124ம் ஆண்டாகரதி மன்மதன் திருவிழா
124ம் ஆண்டாகரதி மன்மதன் திருவிழாதாரமங்கலம்:தாரமங்கலம், பழைய சந்தைப்பேட்டையில், ரதி மன்மதன், 124ம் ஆண்டு திருவிழாவை ஒட்டி, கடந்த, 1ல் கொட்டமுத்து செடி, கரும்பை நட்டு வைத்து பூஜை செய்து வந்தனர். நேற்று இரவு, 7:00 மணிக்கு, அங்குள்ள விநாயகர் கோவில் முன், பொம்மைகளை ரதி மன்மதனாக பாவித்து வைத்தனர்.தொடர்ந்து சிவாச்சாரியார்கள், பொம்மைகளுக்கு கங்கணம் கட்டி யாகவேள்வி செய்து, ரதி, மன்மதன் திருமணம் நடந்தது. அதை பார்த்த மக்கள், அர்ச்சனை துாவி, மொய் வைத்தனர். தொடர்ந்து கொட்டமுத்து செடி, கரும்பை மன்மதனாக வைத்து, அதில் கம்பி மூலம் எதிரே துாணில் கட்டி, அதில் பட்டாசு இணைத்தனர். மன்மதனை சிவன் நெற்றிக்கண்ணில் எரிப்பது போன்று கம்பியில் இருந்த பட்டாசை கொளுத்தி, மன்மதனை எரித்து காம தகனம் நிகழ்ச்சி நடந்தது.ஏராளமானோர் கண்டுகளித்தனர். இன்று மாலை, 6:00 மணிக்கு மன்மதன் அஸ்தியை பஸ் ஸ்டாண்ட் அருகே தெப்பக்குளத்தில் கரைப்பு, நாளை மொச்சை சேகரிக்கப்படும். 16ல் மன்மதனை எழுப்புதல், சிவலிங்க பூஜை நடக்கும்.