உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வரும் 14 முதல் லாரிகள்கர்நாடகா செல்ல வேண்டாம்

வரும் 14 முதல் லாரிகள்கர்நாடகா செல்ல வேண்டாம்

'வரும் 14 முதல் லாரிகள்கர்நாடகா செல்ல வேண்டாம்'ஏற்காடு:சேலம் மாவட்டம் ஏற்காட்டில், மாநில லாரி உரிமையாளர் சம்மேளன செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாநில தலைவர் தன்ராஜ் தலைமை வகித்தார். அதில் குஜராத், ஒடிசா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்டவை போன்று தமிழகத்தில் உள்ள, 22 எல்லை சோதனைச்சாவடிகளை உடனே அகற்றுதல்; சில மாதங்களாக ஆர்.டி.ஓ அலுவலகங்களில் புது ஒளிரும் பட்டைகளை ஒட்டினால் மட்டும் தகுதிச்சான்று வழங்கப்படும் என கட்டாயப்படுத்துவதால், போக்குவரத்து ஆணையரக உத்தரவை நடைமுறைப்படுத்தல்; டீசல் மீதான வாட் வரியை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தல் என்பன உள்பட, 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தமிழகம் முழுதும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.தொடர்ந்து தன்ராஜ் அளித்த பேட்டி:மே முதல் வாரம், கும்மிடிப்பூண்டி சோதனைச்சாவடியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். காலாவதி சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கர்நாடகாவில் வரும், 14 நள்ளிரவு முதல், காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இருந்து லாரிகள், கர்நாடக மாநிலம் செல்ல வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை