உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 21ல் அஞ்சல் குறைதீர் கூட்டம்: 18க்குள் புகார் அனுப்பலாம்

21ல் அஞ்சல் குறைதீர் கூட்டம்: 18க்குள் புகார் அனுப்பலாம்

21ல் அஞ்சல் குறைதீர் கூட்டம்: 18க்குள் புகார் அனுப்பலாம்சேலம்சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் பார்த்தீபன் அறிக்கை: மேற்கு கோட்ட அஞ்சலகத்தில் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம், வரும், 21 மதியம், 3:00 மணிக்கு நடக்க உள்ளது. புகார்களை, 'அஞ்சல் கண்காணிப்பாளர், மேற்கு கோட்டம், சேலம் 636 005' எனும் முகவரிக்கு, வரும், 18க்குள் அனுப்ப வேண்டும். மணியார்டர், பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு செய்யப்பட்ட தபால் போன்ற சேவை தொடர்பான புகார்கள் இருப்பின், அதுதொடர்பான பதிவு எண், பதிவு நாள், அலுவலகம் போன்ற விபரங்களை குறிப்பிட வேண்டும். சேமிப்பு வங்கி, அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு போன்ற சேவை தொடர்பான புகார்கள் இருப்பின் அதுதொடர்பான முழு கணக்கு எண், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசி எண்கள், காப்பீட்டாளரின் பெயர், முகவரி, தபால் அலுவலக பெயர் போன்ற குறிப்புகள் இருக்க வேண்டும். முழு விபரங்கள் அடங்கிய புகாரை, அனுப்பும் அஞ்சல் உறை மீது, 'டாக் அதாலத் கேஸ்' என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை