மகளிர் கலைக்கல்லுாரியில்949 பேருக்கு பட்டம் வழங்கல்
சேலம்:சேலம், கோரிமேடு அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், 23வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. முதல்வர் காந்திமதி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். அதில் சேலம் அரசு இருபாலர் கலைக்கல்லுாரி முதல்வர் செண்பகலட்சுமி, மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கினார். தொடர்ந்து, பெண் கல்வி முக்கியத்துவம், பெண்கள் தன்னம்பிக்கையை வளர்ப்பது குறித்து பேசினார். இதில், 2023 - 24ல் படித்து முடித்த, 746 இளநிலை மாணவியர், 203 முதுநிலை மாணவியர், பட்டம் பெற்றனர். பல்கலை அளவில் முதன்மை இடங்களை பிடித்த மாணவியர் ரூபினா, மீனா, ஸ்ரீமதி ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.