சேலம்: நடிகர் விஜய் கட்சியான, த.வெ.க., சார்பில் முதல் மாநாடு நடத்த, இடம் தேர்வு குறித்து நிர்வாகிகள், சேலத்தில் ஆய்வு செய்தனர். இதனால் சேலம் ரசிகர்கள், நிர்வாகிகள் இடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழகத்தில், 2026ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு, தற்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தி.மு.க.,வின் பலமான கூட்டணி நீடிக்குமா? அ.தி.மு.க.,வின் புது வியூகம், பா.ஜ., கூட்டணி, நாம் தமிழர் கட்சி நிலை என, பல்வேறு முனைகளில் அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், நடிகர் விஜய் தொடங்கியுள்ள, தமிழக வெற்றிக்க-ழகம் சந்திக்கும் முதல் தேர்தலாகவும் மாறியுள்ளது. கட்சி தொடங்கிய பின், அவசரப்படாமல் ஒவ்வொரு அடியும் நிதான-மாக, திட்டமிட்டு எடுத்து வருவதால், விஜய் ரசிகர்கள் உற்சாக-மாகியுள்ளனர். குறிப்பாக, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற திருவள்ளு-வரின் வாக்கை பயன்படுத்தி, அரசியல் பயணத்தை விஜய் தொடங்கியுள்ளார். சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள த.வெ.க.,வில் உறுப்பினர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடந்து வருகிறது. இதுவரை, 48 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்-துள்ள நிலையில், தமிழகம் முழுதும் நிர்வாக அமைப்பை உரு-வாக்கவும், மக்களை சந்தித்து பேசவும் விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்கு, 5 மண்டல மாநாடு, 10 மாவட்ட பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.இதற்கு கட்சியில் மகளிர் அணி, வக்கீல் அணி, இளைஞரணி என, 30 அணிகளை உருவாக்கி, 2 லட்சம் நிர்வாகிகளை நியமிக்-கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள, 'தி கோட்' படம் செப்டம்பரில் வெளியாகிறது. அதைத்தொடர்ந்து அக்டோபரில் பிரமாண்ட மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளார். திருச்சி அல்லது மதுரையில் நடத்த முடிவு செய்து ஆலோசித்து வந்த நிலையில், தற்போது சேலம் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளது.குறிப்பாக சேலத்தில், பிரதமர் மோடி பங்கேற்ற, பா.ஜ., தேர்தல் பிரசார கூட்டம் நடந்த கெஜ்ஜல்நாயக்கன்பட்டி இடத்தை, த.வெ.க., மாநில பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த், நேற்று முன்-தினம் பார்வையிட்டார். அவருடன் சேலம் மாவட்ட தலைவர் பார்த்திபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மேலும் மாநாடு நடத்-துவற்கான வாய்ப்பு குறித்து ஆலோசித்து வருகின்றனர். கட்சி தொடங்கிய பின் நடத்தப்படும் முதல் மாநாடு என்பதோடு, அதில், 2026 சட்ட சபை தேர்தல் குறித்த பல அறிவிப்புகளை வெளியிடுவார் என்பதால், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்-ளது. மேலும் விஜய் அரசியல் வாழ்க்கையில் திருப்புமுனையாக உள்ள இந்த மாநாடு, சேலத்தில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வருவதால், கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள் இடையே பெரும் எதிர்-பார்ப்பை உருவாக்கியுள்ளது.