உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சரக்கு வேன் - மொபட் மோதல்; சைக்கிளில் சென்ற முதியவர் பலி

சரக்கு வேன் - மொபட் மோதல்; சைக்கிளில் சென்ற முதியவர் பலி

பெத்தநாயக்கன்பாளையம்: கடலுாரை சேர்ந்த, மாற்றுத்திறனாளி மணிகண்டன், 44. இவரது மனைவி திலகம், 40. இருவரும் நேற்று மதியம், 1:10 மணிக்கு, 'டி.வி.எஸ்., பெப் பிளஸ்' 3 சக்கர மொபட்டில், ஆத்துார் நோக்கி, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மொபட் பின்புறம், சரக்கு வேன் மோதியது. இதில் மொபட், எதிரே சைக்கிளில் வந்த, வாழப்பாடி, மேட்டுடையார்பாளையத்தை சேர்ந்த, கூலித்தொழிலாளி ராஜேந்திரன், 65, மீது மோத, அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். காயம் அடைந்த மணிகண்டன், திலகத்தை, மக்கள் மீட்டு, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வேன் சாலையில் கவிழ்ந்தது. ஏத்தாப்பூர் போலீசார், தப்பி ஓடிய வேன் டிரைவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை