மேலும் செய்திகள்
பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்ட பயிற்சி முகாம்
27-Aug-2024
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டார வேளாண் துறையின், 'அட்மா' திட்ட தொழில்நுட்ப குழு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் வேலு தலைமை வகித்தார்.அதில் 'அட்மா' திட்டங்கள், கண்டுணர்வு சுற்றுலா, விவசாயிகள் - வேளாண் விஞ்ஞானிகள் கலந்துரையாடல், சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வேளாண் வணிகம், தோட்டக்கலை அலுவலர்கள், அவரவர் துறை திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து விளக்கினர். குழு உறுப்பினர்கள், விவசாயிகளுக்கு உளுந்து விதை, உயிர் உரங்கள் அடங்கிய, 'மினி கிட்' வழங்கப்பட்டது. முன்னோடி விவசாயி உமாசங்கர், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுமித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
27-Aug-2024