உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தி.மு.க., ஆட்சியில் ஆமை வேகத்தில் நடந்த அத்திக்கடவு -- அவிநாசி திட்டப்பணி: இ.பி.எஸ்.,

தி.மு.க., ஆட்சியில் ஆமை வேகத்தில் நடந்த அத்திக்கடவு -- அவிநாசி திட்டப்பணி: இ.பி.எஸ்.,

தி.மு.க., ஆட்சியில் ஆமை வேகத்தில் நடந்தஅத்திக்கடவு -- அவிநாசி திட்டப்பணி: இ.பி.எஸ்.,சேலம், ''அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் 15 சதவீத பணி, தி.மு.க., ஆட்சியில் ஆமை வேகத்தில் முடிந்துள்ளது,'' என, முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., குற்றம்சாட்டினார்.சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அ.தி.மு.க., பொது செயலர் இ.பி.எஸ்., இல்லத்துக்கு, முன்னாள் அமைச்சர் கருப்பண்ணன், அ.தி.மு.க., நிர்வாகிகள், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தால் பயன்பெறும் விவசாயிகள் நேற்று வந்தனர். அவர்களிடம் உரையாடிய பிறகு, இ.பி.எஸ்., நிருபர்களிடம் கூறியதாவது:அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின், 60 ஆண்டு பிரச்னையை தீர்க்க, மாநில நிதி, 1,565 கோடி ரூபாய் ஒதுக்கி, சிறந்த நிர்வாகத்திடம் பணியை நாங்கள் ஒப்படைத்தோம். கொரோனாவால் பணியில் ஓராண்டு தொய்வு ஏற்பட்டாலும், அ.தி.மு.க., ஆட்சியில், 85 சதவீத பணி முடிந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க., அரசு வந்தபின், 15 சதவீத பணி ஆமை வேகத்தில் முடிக்கப்பட்டு, சமீபத்தில் தான் பயன்பாட்டுக்கு வந்தது. இருப்பினும் திட்டத்தை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி. இத்திட்டத்தில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். அதை உடனக்குடன் சரி செய்தால் சிறந்த திட்டமாக பிரதிபலிக்கும்.மேலும், 100 ஏரிகளை நிரப்ப, அ.தி.மு.க., ஆட்சியில் மேட்டூர் உபரிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இப்பணி குறித்து குரல் கொடுக்கும்போது, 4 ஏரிகளை நிரப்புகின்றனர். இப்படி மெல்ல மெல்ல, 30 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், 10 சதவீத நில எடுப்பு பணி உள்ளது. இதை செய்திருந்தால், 100 ஏரிகளிலும் தண்ணீர் நிரப்பி இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை