உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இடைப்பாடியில் இ.பி.எஸ்.,சை தோற்கடிக்க வேண்டும்

இடைப்பாடியில் இ.பி.எஸ்.,சை தோற்கடிக்க வேண்டும்

இடைப்பாடி, நவ. 9-கொங்கணாபுரத்தில், தி.மு.க.,வின் ஓட்டுச்சாவடி முகவர் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய செயலர் பரமசிவம் தலைமை வகித்தார். அதில் சேலம் மேற்கு மாவட்ட செயலரான, எம்.பி., செல்வகணபதி பேசுகையில், ''ஓட்டுச்சாவடி முகவர்கள் வீடுதோறும் சென்று, முதல்வர் செய்து வரும் நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். மாவட்ட, ஒன்றிய, நகர செயலர்கள் உள்ளிட்ட அனைத்து தி.மு.க.,வினருக்கும் கட்சி தான் அடையாளம். அதனால் தேர்தலில் சுணக்கம் காட்டக்கூடாது,'' என்றார்.தொடர்ந்து தொகுதி பொறுப்பாளர் ராணி பேசுகையில், ''இடைப்பாடி தொகுதியில், இ.பி.எஸ்.,சை வரும் சட்டசபை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். பர்கூர் தொகுதியில் ஜெயலலிதாவை தோற்கடித்த நாம், இந்த தொகுதியில், இ.பி.எஸ்.,சை தோற்கடிக்க வேண்டும்,'' என்றார். மாவட்ட அவைதலைவர் தங்கமுத்து, துணை செயலர்கள் சம்பத்குமார், சுந்தரம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், பூவாகவுண்டர், பேரூர் செயலர் அர்த்தனாரீஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல் இடைப்பாடி நகர பகுதியில் நகர செயலர் பாஷா தலைமையில் கூட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி