அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு நல்விருந்து
அரசு தொடக்கப்பள்ளியில்மாணவர்களுக்கு நல்விருந்துதாரமங்கலம், தாரமங்கலம் அருகே மேட்டுமாரனுார் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு நல்விருந்து நேற்று பரிமாறப்பட்டது. இதை, அப்பகுதி மக்கள் மாணவர்களின் பெற்றோர் ஏற்பாடு செய்தனர். பள்ளியில் படிக்கும், 80 மாணவர்களுக்கு மதிய உணவு இடைவேளையில் வாழை இலையில் நல்விருந்து பரிமாறப்பட்டது. தலைமையாசிரியை உள்ளிட்ட அனைவரும், மாணவர்களுடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.