உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 17 மாணவர்களுக்கு ரூ.59 லட்சம் கல்வி கடன் உடனே வழங்கல்

17 மாணவர்களுக்கு ரூ.59 லட்சம் கல்வி கடன் உடனே வழங்கல்

சேலம், சேலம் மாவட்டத்தில் கல்வி கடன் தேவைப்படும் அனைத்து மாணவ, மாணவியரும் பயன்பெற, அந்தந்த வட்டார அளவில் கல்வி கடன் மேளா நடத்தப்படுகிறது. சங்ககிரி வட்டார அளவில் மேளா, காகாபாளையத்தில் நேற்று நடந்தது. 8 வங்கிகள், மாணவ, மாணவியர் அளித்த விண்ணப்பங்களை பரிசீலித்து, 17 மாணவ, மாணவியருக்கு உடனே, 59.70 லட்சம் ரூபாய் மதிப்பில் கல்வி கடன் வழங்கப்பட்டன.தொடர்ந்து கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது:மாவட்டத்தில், 2023 - 24ம் ஆண்டில், 5,773 மாணவ, மாணவியருக்கு, 89.01 கோடி ரூபாய் கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில், 7,000 மாணவர்களுக்கு, 99 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் ஏற்கனவே கடன் வேண்டி வித்யாலட்சுமி, ஜன்சமர்த் இணையதளங்களில் விண்ணப்பித்தோர் மட்டுமின்றி புதிதாக பெற விரும்புபவர்களுக்கும் கடன் வழங்கப்படுகிறது. ஓமலுார் வட்டார மாணவ, மாணவியருக்கு, வரும், 19ல் பத்மவாணி மகளிர் கலை கல்லுாரியில் கல்வி கடன் மேளா நடக்க உள்ளது. தேவைப்படும் மாணவ, மாணவியர் பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.இதில் சங்ககிரி ஆர்.டி.ஓ., லோகநாயகி, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை கடன் ஆலோசகர் வணங்காமுடி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ