மேலும் செய்திகள்
மின் மோட்டார் பழுது தண்ணீரின்றி மக்கள் அவதி
01-Sep-2024
இடங்கணசாலை: இடங்கணசாலை நகராட்சி கொசவப்பட்டி மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. காலை, 7:00 மணிக்கு யாகசாலையில் வேதமந்திரங்களை ஓதிய குருக்கள், யாகசாலையில் கட்டப்பட்ட நுாலை, மூலவரான மாரியம்மன் சிலையில் இணைத்து மந்திரங்கள் மூலம் உயிரூட்டினர். தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு தீர்த்தம் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து திரண்டிருந்த பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது.அதேபோல் கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
01-Sep-2024