பல ஆண்டுகளாக தேங்கி நிற்கும் கழிவு நீரால் மக்கள் கடும் அவதி
மகுடஞ்சாவடி:நடுவனேரி ஊராட்சி, மூன்றாவது வார்டுக்கு உட்பட்ட கே.எம்.எஸ்.ஆர்., வீதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் இருந்து, வெளியேறும் சாக்கடை கழிவு நீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே, 10 அடி ஆழ-முள்ள குட்டையில் தேங்கி நிற்கிறது. குட்டையை சுற்றிலும் செடி, கொடி, மரங்கள் முளைத்து அடர்ந்த வனம் போல் காட்சிய-ளிப்பதால் தேள், பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்களிடம் புகலிடமாக உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதாலும், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாவதாலும் குழந்தைகள் பல்-வேறு விதமான காய்ச்சலால் அவதிப்படுகின்றனர்.இதன் அருகே, 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து குழாய் மூலம், 500 குடும்பங்களுக்கு குடிநீர் செல்கிறது. சில சமயம் குழாய் உடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் கலக்கிறது. இதனால் குடிநீரை மக்கள் விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.எனவே, கழிவுநீர் தேங்கியுள்ள குட்டையிலிருந்து, நடுவனேரி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைபுதுார் ஏரி வரை சாக்கடை அமைத்தால் பிரச்னை தீரும் என பகுதிவாசிகள் தெரிவிக்கின்-றனர்.