உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டி.பி.சி., பாலிடெக்னிக்கில் வேலைவாய்ப்பு முகாம்

டி.பி.சி., பாலிடெக்னிக்கில் வேலைவாய்ப்பு முகாம்

சேலம்: சேலம், டி.பி.சி., பாலிடெக்னிக் கல்லுாரியில், 'பிளேஸ்மென்ட்' மூலம் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், சிவில், பெட்ரோ கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் துறைகளில் படிக்கும், 3ம் ஆண்டு மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. அதில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.துாத்துக்குடி ஸ்பிக், டென்னகோ க்ளீன் ஏர், டி.வி.எஸ்., விக்னேஷ் பாலிமர், அம்மன் கார்ஸ், ஜெயலட்சுமி ஈசர், சென்னை ஐ.எம்., கீர் ஆகிய நிறுவனத்தினர் நடத்தினர். எழுத்துத்தேர்வு, கலந்துரையாடல், நேர்முகத்தேர்வு என, 3 கட்டமாக நடத்தினர்.இதில் வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு, அந்த நிறுவனங்களை சேர்ந்த நிர்வாக இயக்குனர்களான, ஸ்பிக் இசக்கிமுத்து, ஜெயகுமார்; டென்னகோ ஆகாஷ், கிரிஷ்ணா; டி.வி.எஸ்., சந்தாரன், விக்னேஷ் பாலிமர் ரமேஷ்; அம்மன் கார்ஸ் பொன்மணி; ஜெயலட்சுமி ஈசர் அஸ்வின்; ஐ.எம்., கீர் காமராஜ் மற்றும் தாளாளர் கணேசன் ஆகியோர், பணி நியமன ஆணைகளை வழங்கினர். கல்லுாரி முதல்வர், ஆசிரியைகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை