உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தபால் குறைகளை 20க்குள் அனுப்பலாம்

தபால் குறைகளை 20க்குள் அனுப்பலாம்

சேலம் : ஜூலை, 3ல் மண்டல தபால் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளதால், வரும், 20க்குள் புகார்களை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட தபால் முதுநிலை கண்காணிப்பாளர் அறிக்கை: ஜூன் மாதத்துடன் நிறைவடையும் கோவை மண்டல, அரையாண்டு தபால் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம், ஜூலை, 3 காலை, 11:00 மணிக்கு, வீடியோ கான்பரன்ஸ் முறையில் நடக்க உள்ளது. இதில் குறைகளை தெரிவிக்க, 'மண்டல ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்' என குறிப்பிட்டு, ஜூன், 20க்குள் தபால் மூலமோ, மின்னஞ்சல் மூலமோ, குறைகளை அனுப்பி வைக்க வேண்டும். கொள்கை, சட்டம் தொடர்பான குறைகள் ஏற்கப்படாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ