நீரிழிவுநோய் விழிப்புணர்வு கையேடு வழங்கல்
சேலம்: சேலம் எலைட் ரோட்டரி சங்கம் சார்பில் சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை நீரிழிவு நோயாளிகளுக்கு நோய் குறித்த விழிப்புணர்வு கையேடு வழங்கும் நிகழ்வு நேற்று நடந்தது. மாவட்ட ரோட்டரி கவர்னர் சிவக்குமார், 50 பக்க விழிப்புணர்வு கையேட்டை வழங்கினார். அதை நோயாளிகள் வரிசையாக பெற்றுக்கொண்டனர்.டீன் மணிகாந்தன், நீரிழிவு நோய் துறைத்தலைவர் பிரகாஷ், மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜ்குமார், ரோட்டரி நிர்வாகிகள் உடனிருந்தனர்