உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓய்வு போக்குவரத்து தொழிலாளர்களின் பணப்பலனை உடனே வழங்க வேண்டும்

ஓய்வு போக்குவரத்து தொழிலாளர்களின் பணப்பலனை உடனே வழங்க வேண்டும்

சேலம்: ஐக்கிய தொழிற்சங்க காங்.,(யூ.டி.யூ.சி.,) அகில இந்திய, 10வது மாநாடு சேலத்தில் இன்று நடக்கிறது.இதுதொடர்பாக அதன் பொதுச்செயலர், கேரள மாநிலம் கொல்லம் தொகுதி எம்.பி., பிரேமச்சந்திரன், சேலத்தில் நேற்று அளித்த பேட்டி: மத்திய அரசு, 44 தொழிலாளர் சட்டங்களை நான்காக சுருக்கியதை கண்டிப்பது உள்பட மத்திய, மாநில அரசு-களுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்-ளன. இது தொழிலாளர் நலன் சார்ந்த மாநாடாக அமையும்.தமிழகத்தில் தொடர்ச்சியாக, 'அவுட் சோர்சிங்' முறை அமல்ப-டுத்தப்படுகிறது. குறிப்பாக செவிலியர், ஆசிரியர், மின் ஊழியர் பணியிடத்துக்கு பெருமளவில், 'அவுட்சோர்சிங்' முறை கையா-ளப்படுகிறது. இதற்கு நிதி பற்றாக்குறை காரணம் எனக்கூறுவது முற்றிலும் தவறு.போக்குவரத்து தொழிலாளர் மற்றும் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் பணப்பலனை உடனே வழங்க வேண்டும்.புது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சை தொடங்க வேண்டும். இல்லை எனில் அனைத்து தொழிற்சங்கத்தினர் இணைந்து அர-சுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவோம். மத்திய, மாநில அரசுகள், 99 சதவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியிருப்ப-தாக கூறுவது பொய். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ