உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பணப்பட்டுவாடா செய்த 2 பேர் சுற்றிவளைப்பு

பணப்பட்டுவாடா செய்த 2 பேர் சுற்றிவளைப்பு

சேலம், சேலம், சீலநாயக்கன்பட்டி, கணபதி நகரில், 2 பேர், தி.மு.க.,வுக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக, அப்பகுதி மக்கள், தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் கொடுத்தனர். இதனால் பறக்கும் படையின் வீரமணி தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். அப்போது, பணம் கொடுத்து கொண்டிருந்த, அரியானுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் பேராசிரியராக பணிபுரியும், சீலநாயக்கன்பட்டி, கே.ஆர்.நகரை சேர்ந்த சசிகுமார், 43, பாப்பம்பாடியை சேர்ந்த, 17 வயது சிறுவனை சுற்றிவளைத்தனர். அவர்களிடம் இருந்த, 1.76 லட்சம் ரூபாயை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரும், அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் பணப்பட்டுவாடா குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ