உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் 4க்குள் எமிஸ் தளத்தில் பதிய உத்தரவு

ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் 4க்குள் எமிஸ் தளத்தில் பதிய உத்தரவு

சேலம்,தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், இடமாறுதல் கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மனமொத்த மாறுதல் கோரும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு பதிவு, 'எமிஸ்' இணையதளத்தில் தொடங்கியுள்ளது. இதில் ஒரே வகை பணியிடத்தில் வேறு வேறு இடங்களில் பணிபுரியும் இருவர், பணியிடத்தை மாற்றிக்கொள்ள பதிவு செய்யலாம்.அதேநேரம் ஓய்வு பெற, 2 ஆண்டுகளே உள்ளவர்கள் பங்கேற்க முடியாது; ஆண் ஆசிரியர்கள், பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளிக்கும் விண்ணப்பிக்க முடியாது. வரும், 4க்குள், 'எமிஸ்' இணையதளத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம், மாவட்டத்துக்குள் மாறுதல் கோரும் ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஒப்புதல் அளித்த நிலையில், ஆக., 6ல் பணிமாறுதல் ஆணை வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை