உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மீட்கப்பட்ட கோவில் நிலம் ரூ.80,000க்கு ஏலம்

மீட்கப்பட்ட கோவில் நிலம் ரூ.80,000க்கு ஏலம்

கெங்கவல்லி, சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலுாரில் கைலாசநாதர், அய்யனார், பெரியாண்டவர் கோவில்கள் உள்ளன. இக்கோவில்களின், 3.71 ஏக்கர் விவசாய நிலத்தை, பல ஆண்டாக சிலர் பயன்படுத்தி வந்தனர். ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கடந்த மாதம், நிலத்தை மீட்டு கோவில் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.நேற்று முன்தினம் கைலாசநாதர் கோவில் வளாகத்தில், அறநிலையத்துறை ஆர்.ஐ., கோவிந்தராஜ் தலைமையில் கோவில் நிலம் பொது ஏலம் விடப்பட்டது. கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான, 1.46 ஏக்கர், 7,987 ரூபாய்; பெரியாண்டவர் கோவிலின், 1.69 ஏக்கர், 55,560 ரூபாய்; அய்யனார் கோவிலின் அரை ஏக்கர் நிலம், 17,363 ரூபாய் என, 80,910 ரூபாய்க்கு ஏலம் போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை