உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மின்சாரம் திருடிய இருவருக்கு அபராதம்

மின்சாரம் திருடிய இருவருக்கு அபராதம்

ஆத்துார்:சேலம் மின் திருட்டு தடுப்பு குழுவினர், ஆத்துார் அருகே புங்கவாடியில் திடீர் ஆய்வு நடத்தினர். விவசாயி நல்லுசாமி, 65, என்பவரின் விவசாயத்துக்கான மின் இணைப்பில், 3 எச்.பி.,க்கு, அதிக சக்தி வாய்ந்த மின் மோட்டார் பயன்படுத்தியது தெரிந்தது. இதனால், அவருக்கு, 78,737 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதே பகுதியில் வெங்கடாசலம், 55, என்பவரின் விவசாய மின் இணைப்பில் கூடுதல் மின்மோட்டாரை, வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு, 93,335 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.இதுகுறித்து, மின்வாரிய அலுவலர்கள் கூறுகையில், 'மின்சாரம் திருடிய இரு விவசாயிகளுக்கும், 1.72 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குற்ற நடவடிக்கையை தவிர்க்க மேலும் 3,000 ரூபாய் சமரசத் தொகை செலுத்தினர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி