உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பட்டியலின சிறுவனை தாக்கிய இரு பெண்களிடம் விசாரணை

பட்டியலின சிறுவனை தாக்கிய இரு பெண்களிடம் விசாரணை

ஓமலுார்:பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவனை தாக்கிய பெண்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.சேலம் மாவட்டம், காடையாம்பட்டி, பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்த, 11 வயது சிறுவன், அங்குள்ள அரசு பள்ளியில், 6ம் வகுப்பு படிக்கிறான். நேற்று முன்தினம் மதியம், பள்ளியில் இருந்து வீட்டுக்கு செல்லும் வழியில், இரு பெண்கள் தாக்கியதாக, அச்சிறுவன் ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.சிறுவனின் தந்தை கூறியதாவது:நாங்கள் பட்டியலின மக்கள். மகன் பள்ளியில் இருந்து, குடியானவர் வசிக்கும் தெரு வழியே வந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த இரு பெண்கள், மகனை தாக்கியுள்ளனர். சட்டை, பேன்ட் கிழிந்தது. அச்சமடைந்த மகனுக்கு, தற்போது வரை காய்ச்சல் உள்ளது. இதுபோன்று அவன் பலமுறை அடிவாங்கியுள்ளதாக மக்கள் தெரிவித்தனர். தீவட்டிப்பட்டி போலீசார் வாக்குமூலம் வாங்கினர். அடிக்கடி இச்சம்பவம் நடக்கிறது. அடித்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என, மகனை மிரட்டி உள்ளனர். அங்கு வாழவே அச்சமாக உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் உமாசங்கரிடம் கேட்டபோது, ''விசாரணை நடக்கிறது. வழக்கு ஏதும் பதியவில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை