உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பாலமலையில் வளர்க்கப்படும் நாட்டு மாடுகளுக்கு தடுப்பூசி

பாலமலையில் வளர்க்கப்படும் நாட்டு மாடுகளுக்கு தடுப்பூசி

கொளத்துார்: கொளத்துார் ஒன்றியத்தில், 14 ஊராட்சிகள் உள்ளன. அதில், 13 ஊராட்சிகளில் சிந்து, ஜெர்சி உள்ளிட்ட கலப்பின மாடுகளை விவசாயிகள் வளர்க்கின்றனர். ஆனால் நிலமட்டத்தில் இருந்து, 1,000 அடி உயரத்துக்கு மேல் உள்ள பாலமலை ஊராட்சியில், 33 கிராமங்களில் விவசாயிகள் கலப்பினம் இல்லாத, 2,800 முதல், 3,000 நாட்டு மாடுகளை மட்டுமே வளர்க்கின்றனர். அந்த மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்காமல் இருக்க, நேற்று கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய கால்நடை நோய் கட்டுப்பாடு திட்டம் சார்பில் தடுப்பூசிகள் போடப்பட்டன.மேட்டூர் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் செல்வகுமார் தலைமையில் உதவி மருத்துவர்கள், பாலமலையில் உள்ள ராமன்பட்டி, தலைக்காடு, கடுக்காமரத்துக்காடு, பாத்திரமடுவு கிராமங்களில், 1,400 நாட்டு மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை