உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வேலம்மாள் பள்ளி ஆண்டு விழா

வேலம்மாள் பள்ளி ஆண்டு விழா

ஆத்துார்: தலைவாசல், மணிவிழுந்தான் தெற்கில் உள்ள வேலம்மாள் பள்ளி செயல்படுகிறது. அங்குள்ள வேலம்மாள் போதி வளாகத்தில், கடந்த, 8ல், முதலாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. பள்ளி நிறுவனர் முத்துராமலிங்கம், இயக்குனர் சசிகுமார், கல்வி இயக்குனர் கீதாஞ்சலி, பள்ளி மண்டல தலைவி செல்வநாயகி, முதல்வர் லாவண்யா முன்னிலை வகித்தனர்.வேலம்மாள் போதி நிழலில் படித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ள, மண்டல வணிக மேலாளர் சித்ரா, நீளம் தாண்டுதலில் தேசிய அளவில் சாதனை படைத்த வீராங்கனை சப்ரின்தவாமீ பேசினர். பள்ளியில் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், 'ஒ.டி.சி., 2025' தலைப்பில், புரட்சி பெண்கள் குறித்த கலை நிகழ்ச்சி நடந்தது. மாணவ, மாணவியர், பெற்றோர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை