மேலும் செய்திகள்
மகளிர் விவசாயிகள் தின விழா
16-Oct-2026
பனமரத்துப்பட்டி: நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனியார் வேளாண் அறிவியல் கல்லுாரி மாணவர்கள், கிராமப்புற வேளாண் அனுபவ பயிற்சிக்கு, சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியில் தங்கியுள்ளனர்.அவர்கள் நேற்று, பள்ளிதெருப்பட்டி, பனமரத்துப்பட்டி விவசாயிகளிடம், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.ஆதார் அடிப்படையிலான மின்னணு சரிபார்ப்பு(இ.கே.ஒய்.சி.,) முறையில் வங்கி கணக்கு விபரங்களை சரிபார்க்கும் முறை குறித்து விளக்கம் அளித்தனர்.தகுதியான விவசாய குடும்பத்துக்கு ஆண்டுக்கு, 6,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுவது குறித்தும் விளக்கினர்.
16-Oct-2026