இ - சேவை மையத்தில் நில அளவீடுக்கு விண்ணப்பிக்கலாம்
சேலம்: சேலம் மாவட்டத்தில் நில உரிமையாளர்கள், நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு செல்லாமல், https://tamilnilam.tn.gov.in./citizen என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் வசதி, 2023ல் தொடங்கப்பட்டது.தற்போது இச்சேவை, தமிழகம் முழுதும் அனைத்து இ - சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கும்படி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதனால் நில உரிமையாளர்கள், இ - சேவை மையங்களை அணுகி, உரிய கட்டணம் செலுத்தி, விண்ணப்பித்து பயன்பெறலாம். அளவீடு செய்யப்படும் நாள், மனுதாரர் மொபைலுக்கு குறுஞ்செய்தி அல்லது தொடர்பு கொண்டு தெரிவிக்கப்படும்.அளவீடு முடிந்த பின், மனுதாரர், நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை, வரைபடம், நில அளவரால் பதிவேற்றம் செய்யப்பட்டு, மனுதாரர், https://eservices.tn.gov.in/ என்ற இணைய வழி சேவை மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.