உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வெ.கரட்டூரில் மேலும் 1 கூண்டு; சிறுத்தையை தேடும் வனத்துறை

வெ.கரட்டூரில் மேலும் 1 கூண்டு; சிறுத்தையை தேடும் வனத்துறை

மேட்டூர்: சேலம் மாவட்டம் கொளத்துார், தின்னப்பட்டி ஊராட்சி வெள்ளக்கரட்டூரில் விவசாயி சுரேஷ் நிலத்தில் கட்டியிருந்த வெள்ளாட்டை, மர்ம விலங்கு கடித்து கொன்றது. இதனால் அந்த நிலம் அருகே வனத்துறை சார்பில் ஒரு கூண்டு வைக்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் அதிகாலை, அருகே உள்ள தேவராஜ் பட்டியில், 5 செம்மறியாடுகளை மர்ம விலங்கு கடித்து கொன்றது.இதையடுத்து விவசாயிகள் ஒன்றுகூடி போராட்டம் நடத்த முயன்றனர். உடனே அங்கு வந்த, சேலம் உதவி வனபாதுகாவலர் செல்வகுமார், கூடுதலாக கூண்டு வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். அதன்படி அன்று இரவே, மேலும் ஒரு கூண்டு, கரடு அடிவாரம் வைக்கப்பட்டது. நேற்று, ஈரோடு, சத்தியமங்கலம் வனத்துறை ஊழியர்கள், 30 பேர், வெள்ளக்கரட்டூரில் முகாமிட்டு சிறுத்தையை தேடி, ரோந்து பணி மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை