உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தொழிலாளி அடித்துக்கொலை வாலிபருக்கு 12 ஆண்டு சிறை

தொழிலாளி அடித்துக்கொலை வாலிபருக்கு 12 ஆண்டு சிறை

சேலம், சேலம், அம்மாபேட்டை, வெங்கடாசலபதி தெருவை சேர்ந்தவர் பழனிசாமி, 40. கூலித்தொழிலாளியான இவருக்கு, மது அருந்தும் பழக்கம் இருந்ததால், மனைவி, பிள்ளைகளுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். அதன்படி 2020 நவ., 1ல் தகராறு ஏற்பட, கொய்யா தோப்பு பெரியாண்டிச்சி அம்மன் கோவில் அருகே படுத்து துாங்கச்சென்றார்.அப்போது கோவில் வளாகத்தில் இருந்த அதே பகுதியை சேர்ந்த விஜி, 34, தர்மேந்திரன், 41, ஆகியோருடன், பழனிசாமி மது அருந்தினார். பின், மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விஜி, தர்மேந்திரன் இணைந்து, பழனிசாமியை கட்டையால் தலையில் தாக்கியுள்ளனர். காயம் அடைந்த பழனிசாமி, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது வாக்குமூலப்படி, போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிந்தனர். ஆனால் பழனிசாமி உயிரிழந்ததால், கொலை வழக்காக மாற்றப்பட்டது.இந்த வழக்கு சேலம் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் விஜிக்கு, 12 ஆண்டு சிறை, 12,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி எழில்வேலவன் நேற்று உத்தரவிட்டார். அதேநேரம் தர்மேந்திரன் விடுவிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ