உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாகன கடன் நிறுவனத்தில் ரூ.1 கோடி மோசடி கிளை மேலாளர் உள்பட 14 பேருக்கு வலை

வாகன கடன் நிறுவனத்தில் ரூ.1 கோடி மோசடி கிளை மேலாளர் உள்பட 14 பேருக்கு வலை

சேலம்: வாகன கடன் வழங்கும் நிறுவனத்தில், 1 கோடி ரூபாய் மோசடி செய்த, கிளை மேலாளர் உள்பட, 14 பேரை, போலீசார் தேடு-கின்றனர்.சேலம் மாவட்டம் கொளத்துாரில் வாகன கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவனம் உள்ளது.அங்கு, சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள், லாரி, கார் உள்-ளிட்ட வாகனங்கள் வாங்க கடன் கேட்டு விண்ணப்பித்தனர். பல மாதங்களாகியும் கடன் கிடைக்காததால், தலைமை மேலாள-ருக்கு புகார் அனுப்பப்பட்டது.ஆனால் கடன் வழங்கியதாக, நிதி நிறுவன ஆவணங்களில் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதனால் ஆவணங்களை தணிக்கை செய்ததில், கடந்தாண்டு மார்ச் முதல் நடப்பாண்டு ஜூலை வரை, கடன் வழங்கியதாக கணக்கு காட்டி, 1.11 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரிந்தது.இதுகுறித்து சேலம், மணக்காட்டை சேர்ந்த, நிதி நிறுவன மண்-டல கடன் வசூல் தலைமை மேலாளர் நரேந்திரன், 42, சேலம் எஸ்.பி., கவுதம் கோயலிடம் புகார் அளித்தார். தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் பண மோசடி உறுதியானது.இதனால் கூட்டு சதி, நம்பிக்கை துரோகம், மோசடி உள்ளிட்ட பிரிவுகளில், நிதி நிறுவன கிளை மேலாளர் சம்பத், கடன் தொகை வசூலிப்பாளர்கள் சிலம்பரசன், பெரியசாமி, செந்தில், அருண்குமார், வேலுசாமி உள்பட, 14 பேர் மீது, நேற்று முன்-தினம் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை