உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 15க்குள் வருடாந்திர நமூனா படிவம்

15க்குள் வருடாந்திர நமூனா படிவம்

சேலம்: 'ஜூலை 15ம் தேதிக்குள், வருடாந்திர நமூனா படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும்' என்று சேலம் வணிக வரி கோட்ட இணை ஆணையர் வயணப்பெருமாள் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் வணிகவரி கோட்டம் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்டத்தின் கீழ், பதிவு பெற்ற அனைத்து வரி செலுத்தும் வணிகர்களும், படிவம் 'ஐ' மாதாந்திர நமூனா சமர்ப்பித்து வருகின்றனர். வரி செலுத்தாத வணிகர்கள், அதாவது வரி விலக்கு பெற்ற பொருட்கள் தொடர்பான வாணிகம் செய்யும் வணிகர்கள் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் அல்லது 10 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட விற்றுமுதல் உடைய வணிகர்கள், படிவம் 'ஐ-1'ல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 20ம் தேதிக்குள் வருடாந்திர நமூனா உரிய வரி விதிப்பு சரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பெரும்பான்மையான வணிகர்கள் படிவம் 'ஐ-1' நமூனாக்கள் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிய வருகிறது. இதுவரை படிவம் 'ஐ-1' நமூனா சமர்ப்பிக்காத வரி செலுத்தாத, வணிகர்கள் அனைவரும் தங்களுடைய வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) படிவம் 'ஐ-1' நமூனாவை அவரவருக்குரிய சரகங்களில், ஜூலை 15ம் தேதிக்குள் சமர்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். வரும் 15ம் தேதிக்குள் படிவம் 'ஐ-1' சமர்ப்பிக்கவிட்டால், சமர்ப்பிக்காத வணிகர்களின் பதிவு சான்று எவ்விதமான முன் அறிவிப்புமின்றி ரத்து செய்யப்பட்டு விடும் என, அறிவிக்கப்படுகிறது. எனவே, வரி செலுத்தாத அனைத்து வணிகர்களும், இதை இறுதி வாய்ப்பாக கருதி படிவம் 'ஐ-1' நமூனா சமர்ப்பிதலின் அவசியத்தை உணர்ந்து வணிக வரித்துறைக்கு, ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை