உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கொலை வழக்கில் 17 பேர் ஆஜர்

கொலை வழக்கில் 17 பேர் ஆஜர்

சேலம்:சேலம், அஸ்தம்பட்டி அருகே மணக்காட்டை சேர்ந்தவர் சோலைராஜ். தி.மு.க., வட்ட செயலராக இருந்த இவரை, 2010ல் ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. அஸ்தம்பட்டி போலீசார் விசாரணையில், மணக்காட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக கொலை நடந்தது தெரிந்தது. பின், 21 பேரை, போலீசார் கைது செய்தனர். இதில், 4 பேர் இறந்து விட்டனர். இந்நிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் மீதி, 17 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். விசாரித்த நீதிபதி கலைவாணி, வரும், 6க்கு ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை