உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரயிலில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

ரயிலில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

சேலம், அசாம் மாநிலம் திப்ருகர் - கன்னியாகுமரி விரைவு ரயில் நேற்று மதியம், 12:30 மணிக்கு சேலம் ரயில்வே ஸ்டேஷனை அடைந்தது. அந்த ரயிலில், பாதுகாப்புபடை போலீசார், சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி பயணித்த இருவரிடம் விசாரித்ததில், திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்த கவுபிக் அகமது, 32, தமீம் அன்சாரி, 20, என தெரிந்தது. அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், 6.5 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.தொழிலாளிகொளத்துார், காவேரிபுரம் ஊராட்சி சத்யா நகர், நாயம்பாடியை சேர்ந்த கட்டட தொழிலாளி ராஜ்குமார், 24. திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், அதே பகுதியில் கஞ்சா பொட்டலங்களை விற்றுள்ளார். நேற்று காலை, கொளத்துார் போலீசார் அவரை கைது செய்து, 276 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி