உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீடுகளில் இருந்த 2 நாக பாம்பு மீட்பு

வீடுகளில் இருந்த 2 நாக பாம்பு மீட்பு

கெங்கவல்லி, கெங்கவல்லி அருகே கடம்பூர் சாலையை சேர்ந்தவர் முத்துலட்சுமி, 40. இவரது வீட்டில் நேற்று பாம்பு இருப்பதாக, கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. காலை, 10:30 மணிக்கு அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், 4 அடி நாகப்பாம்பை உயிருடன் பிடித்து, கெங்கவல்லி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதேபோல் கெங்கவல்லி, ஒதியத்துார் பிரிவு சாலையை சேர்ந்த கார்த்திக், 35, வீட்டில், 5 அடி நீள நாக பாம்பை பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை