இடி, மின்னலால் 2 மாடுகள் பலி
இடி, மின்னலால் 2 மாடுகள் பலிவாழப்பாடி, செப். 29-வாழப்பாடி அருகே குறிச்சி, காமராஜபுரத்தை சேர்ந்த விவசாயி ராஜசேகர், 58. இவரது இரு பசு மாடுகளை, வீட்டின் முன் நேற்று முன்தினம் இரவு கட்டி வைத்துள்ளார். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, இரு மாடுகளும் இறந்து கிடந்தன. அவர் அதிர்ச்சி அடைந்து வருவாய்த்துறையினருக்கு தகவல் அளித்தார். தொடர்ந்து கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதனையில் இரவு மழையின்போது ஏற்பட்ட, இடி, மின்னலால் இரு மாடுகளும் உயிரிழந்தது தெரிந்தது.