கருவேல மரங்களை அகற்ற 2 ஊராட்சிகள் தேர்வு
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், 20 ஊராட்சிகள் உள்ளன. தனி அலுவலர் கட்டுப்பாட்டில் ஊராட்சி நிர்வாகம் உள்ளது. அதில் சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்ற, ச.ஆ.,பெரமனுார், பள்ளி தெருப்பட்டி ஆகிய ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த ஊராட்சிகளில் கருவேல மரங்களை அகற்றும் பணியை மேற்கொள்ள, செயலர்களிடம் ஒன்றிய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.