கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர்
சேலம், சேலம், அன்னதானப்பட்டி போலீசார், நேற்று முன்தினம் தாதகாப்பட்டியில் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த, 2 பேரை பிடித்து விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த தர்மன், 26, சதிஷ்குமார், 29, என தெரிந்தது. அவர்களை சோதனை செய்ததில், 1.4 கிலோவை கஞ்சாவை விற்க வைத்திருந்தது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.