உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வெள்ளி பட்டறை ஓனர் உள்பட 2 பேர் மாயம்

வெள்ளி பட்டறை ஓனர் உள்பட 2 பேர் மாயம்

சேலம் : சேலம், சையது காசிம் தெருவை சேர்ந்தவர் முகமது அலி, 58. செவ்வாய்பேட்டையில் வெள்ளி பட்டறை வைத்துள்ளார். நேற்று முன்தினம் பட்டறைக்கு செல்வதாக புறப்பட்ட அவர், வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் காணாததால், அவரது மனைவி தில்ஷா, நேற்று முன்தினம் அளித்த புகார்படி, டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.சேலம், இரும்பாலையை சேர்ந்தவர் சந்தோஷ், 21. ஓராண்டுக்கு முன் வினிதா, 21, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவிநாசியில் உள்ள தனியார் நுாற்பாலையில் பணியாற்றும் வினிதா, கடந்த, 2ல் சேலம் வந்தார். அப்போது புது பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த சந்தோஷூக்கும் வினிதாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கோபம் அடைந்த வினிதா, புறப்பட்டார். நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சந்தோஷ், பஸ் ஸ்டாண்ட் முழுதும் தேடியும் காணவில்லை. இதுகுறித்து அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை