நீதிமன்றத்தில் ஆஜராகாத 2 பேர் சுற்றிவளைப்பு
கெங்கவல்லி, கெங்கவல்லி, கணவாய்காட்டை சேர்ந்தவர் விக்னேஷ், 30. நடுவலுார், மோட்டூரை சேர்ந்தவர் துரைசாமி, 49. இவர்கள் மீது, 2021ல், வெவ்வேறு பிரச்னை தொடர்பாக நடந்த அடிதடி வழக்கில், கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிந்தனர். இந்த வழக்குகள், ஆத்துார் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடக்கிறது. விசாணைக்கு இருவரும் ஆஜராகாமல் இருந்து வந்தனர். இதனால் நீதிமன்றம், பிடிவாரன்ட் பிறப்பித்தது. நேற்று விக்னேஷ், துரைசாமியை, கெங்கவல்லி போலீசார் கைது செய்து, ஆத்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வரும், 13 வரை, சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து இருவரையும், போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.