உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பள்ளியில் பாம்பு தீண்டி 2 மாணவர்கள் அட்மிட்

பள்ளியில் பாம்பு தீண்டி 2 மாணவர்கள் அட்மிட்

சேலம், :சேலம், கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று முன்தினம் காலை, மாணவ, மாணவியர் வந்து கொண்டிருந்தனர். பிளஸ் 1 மாணவர் கவின்குமார், மணிபாரதி ஆகியோர் வகுப்பறைக்குள் நுழைந்தபோது, அங்கிருந்த பாம்பை மிதித்துள்ளனர். அதில் இரு மாணவர்களையும் பாம்பு தீண்டியது. ஆசிரியர்கள் பார்த்து, இருவரையும் உடனே சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், ''பள்ளி வளாகத்தில் முறையான பராமரிப்பின்றி முட்புதர் வளர்ந்துள்ளது. தற்போது பாம்பு தீண்டியதால், மாணவ, மாணவியர் அச்சமடைந்துள்ளனர். அதனால் முட்புதர்களை அகற்ற வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை