காஸ்டிக் சோடா பட்டதில் 2 தொழிலாளருக்கு தீக்காயம்
மேட்டூர், மேட்டூர், ராமன் நகரில், தனியார் ரசாயன தொழிற்சாலை உள்ளது. அதன், 3வது அலகில் காஸ்டிக் சோடா உள்பட பல்வேறு ரசாயன பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அங்கு, 20 தொழிலாளர்கள், ஒப்பந்த நிறுவனத்தின் கீழ்பணிபுரிகின்றனர். நேற்று மதியம், 11:00 மணிக்கு, காஸ்டிக் சோடா தயாரிக்க பயன்படும் சூடான உப்பு சிதறி, மேச்சேரி, செங்காட்டூரை சேர்ந்த கேசவன், 34, கருமலைக்கூடல், ராமமூர்த்தி நகர் சுதர்ஷன், 25, ஆகிய தொழிலாளர்கள் மீது விழுந்து, தீக்காயம் ஏற்பட்டது. இருவருக்கும் ஆலையில் முதலுதவி அளித்து, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கருமலைக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.