உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 2026 தேர்தல் பைனல் மேட்ச் : துணை முதல்வர் கணிப்பு

2026 தேர்தல் பைனல் மேட்ச் : துணை முதல்வர் கணிப்பு

ஓமலுார்: தி.மு.க., இளைஞரணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், சேலம் அருகே கருப்பூரில் நேற்று நடந்தது. அதில் இளைஞரணி மாநில செயலர், துணை முதல்வருமான உதயநிதி தலைமை வகித்து பேசியதாவது:இளைஞர் அணியில் இருந்த பலர், ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், எம்.எல்.ஏ., - எம்.பி., மட்டுமின்றி, நான் கூட இளைஞரணியில் இருந்து தான் துணை முதல்வர் பொறுப்புக்கு வந்துள்ளேன். தலைவர் ஸ்டாலினும், இளைஞரணியில் இருந்து வந்தவர். தி.மு.க.,வுக்கு, இளைஞரணி தான் மிகுந்த பலம். ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களுடன் நாம் நெருக்கமாக இருக்க வேண்டும். சென்னையில் மழையின்போது, தி.மு.க., இளைஞரணியினர் தான் களத்தில் இருந்தனர். ஒரு அ.தி.மு.க.,வினர் கூட களத்தில் கிடையாது. விரைவில் உங்கள் பணிக்கு ஏற்ப பதவி உயர்வு அளிக்கப்படும்.கடந்த, 2024 தேர்தல் 'செமி பைனல்'. அதில் நாம் வெற்றி பெற்றுவிட்டோம். 2026ல் நடக்கவுள்ள தேர்தல் 'பைனல் மேட்ச்'. அதில் கண்டிப்பாக, 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். அரசு திட்டங்களை அமைச்சர், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மூலம் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். இப்போதே தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின் மாவட்டம் வாரியாக உதயநிதிக்கு நினைவு பரிசுகளை வழங்கி, குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ