218 போலீசார் இடமாற்றம்
சேலம், சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, டவுன், அழகாபுரம் உள்பட, 15 போலீஸ் ஸ்டேஷன், சிறப்பு பிரிவு என, 21 ஸ்டேஷன்கள் உள்ளன. அதில், ஒரே ஸ்டேஷனில் தொடர்ந்து, 3 ஆண்டு பணிபுரிந்த போலீசார் இடமாற்றப்படுகின்றனர். விருப்ப இடம் கேட்டும் மாற்றம் பெறலாம். அதன்படி ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், 21 ஸ்டேஷன்களில், 147 எஸ்.எஸ்.ஐ.,க்கள், 71 ஏட்டுகள் என, 218 போலீசாரை இடமாற்றம் செய்து, கமிஷனர் அனில்குமார் கிரி நேற்று உத்தரவிட்டார்.