3 மாதத்தில் 5,059 யுனிட்ரத்த தானம்
3 மாதத்தில் 5,059 யுனிட்ரத்த தானம்சேலம்:சேலம் அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி உள்ளது. அங்கு அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்கள், பல்வேறு சமூக ஆர்வலர்கள், இயக்கத்தினர் ரத்த தானம் செய்கின்றனர். அதன்படி கடந்த ஜனவரியில், 1,703 யுனிட், பிப்ரவரியில், 1,571, மார்ச்சில், 1,785 என, 5,059 யுனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளதாக, மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.