உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டிரைவரை தாக்கி நகை பறித்த 3 பேருக்கு வலை

டிரைவரை தாக்கி நகை பறித்த 3 பேருக்கு வலை

தாரமங்கலம், கேரள மாநிலத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கிருஷ்ணகுமார், 45. இவர், சேலம் மாவட்டம் கே.ஆர்.தோப்பூர் கந்தப்பிச்சனுாரில் உள்ள அக்கா சரோஜினி வீட்டுக்கு வந்தார். மீண்டும் கேரள மாநிலம் செல்ல, 18 இரவு, 12:30 மணிக்கு கே.ஆர்.தோப்பூரில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த கருக்கல்வாடி மண்காட்டை சேர்ந்த அஜித், மோகன் உள்பட, 3 பேரும், பீர் பாட்டிலால் கிருஷ்ணகுமாரை தாக்கி, அவரிடம் இருந்த, 2 பவுன் சங்கிலி, 10,500 ரூபாயை பறித்தனர். அப்போது அங்கு வந்த கிருஷ்ணகுமாரின் மாமா சின்னண்ணன் தட்டிக்கேட்க, அவரையும் தாக்கியுள்ளனர். சின்னண்ணன் வந்த, 'சுசூகி' பைக்கையும் தீ வைத்து எரித்தனர். காயம் அடைந்த கிருஷ்ணகுமார், ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, தாரமங்கலம் போலீசார், அஜித் உள்பட, 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !