உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பெருமாள் கோவிலில் 3 சிலைகள் உடைப்பு

பெருமாள் கோவிலில் 3 சிலைகள் உடைப்பு

சேலம்: சேலம், அன்னதானப்பட்டி சண்முகா நகரில் உள்ள பெருமாள் கோவிலில் பெருமாள், விநாயகர், நாகர் சிலைகள் உள்ளன. அங்கு நேற்று முன்தினம் மர்ம நபர்கள் நுழைந்து, 3 கற்சிலைகளையும் உடைத்துள்ளனர். நேற்று காலை, சிலைகள் உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணையில், மது போதையில் சிலைகளை உடைத்தது தெரிந்தது. அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை